Tuesday, December 15, 2009

சூடுபிடிக்கும் நம்ம ஊரு கிரிக்கட் - ராஜு vs சரவணா

சிற்றூர்தான் நம்ம ஊரு. அழகான ஊருதான். நீர், காற்று, இயற்கை வளங்கள் இது எதுக்குமே இங்க குறைச்சலே கிடையாது. அனைத்து இன மக்களும் சந்தோசமா வாழுகிற (அப்படித்தான் நான் நினைக்கிறன்) வளமான ஊரு. 


ஊரைப்பற்றி சொல்லிகிட்டே போனா சரிவராது. ஊருக்குள்ள நடக்கிற கதைய சொல்லத்தான் நான் வந்தன். அது என்னன்னா நம்ம ஊர்ல ஒரு கிரிக்கட் டீம். அதிரடியான ஆட்டம் பிரபலமான பந்து வீச்சு அது மட்டமா ஆடுகளத்திலயும் அப்படித்தான். சும்மா கலக்குவானுங்க. இந்த டீமுக்கு கெப்டன் யாரு தெரியுமா? ராஜு!. அதிரடியான சகலதுரை ஆட்டக்காரன். நல்ல கெப்டன் (ராஜுட டீம் ரசிகர் கூட்டம் சொல்லுது) நல்ல கெப்டன் ஆனதுக்கு ஒரு ரீஸன் இருக்கு. அதுதான் நம்ம ஊர் என்னாலும் தோத்து போய்கிட்டு இருந்து பக்கத்து ஊர தோற்கடிச்சு கப்பை நம்ம ஊருக்கு கொண்டுவந்தது. 


இந்த கப்ப வெல்றதுக்கு நம்ம ராஜு ரொம்ப கஸ்டப்பட்டிச்சு. டீம்ல இருக்கிற எல்லாரும் பயங்கரமா விளையாடி தன்ட பங்களிப்புகள செஞ்சாங்க. அதிலயும் ராஜு டீம்ல இருக்கிற சகலதுறை வீரன் சரவணாட பங்களிப்பு மிக முக்கியமானது. (வெற்றிக்கு பிறகு சரவணாதான் கேக் வெட்டினான் என்றா அவன் பங்களிப்பு எப்படி இருந்திருக்கும்) எப்படியோ எல்லாருமா சேர்ந்து விளையாடினதுல நம்ம ஊருக்கு கப்பும் வந்திருச்சு.(கப் நம்ம ஊருக்கு வந்ததுல பக்கத்து ஊரானுங்க கொஞ்சம் கோவமா இருப்பானுங்க என்றுதான் நினைக்கிறன்) 


இந்த கப்ப நம்ம ஊருக்கு கொண்டுவந்ததுலதான் இந்த கதையே ஆரம்பிக்குது. இந்த வெற்றிக்கு பிறகு ராஜுக்கு சரவணாக்கும் இடையில ஒரு சின்ன முறுகல். ராஜு டீம் காசுல ஊழல் பண்றான் என்று சரவணா சொல்ல சரவணா பக்கத்து ஊரு டீமுக்கு விலை போறான் - என் கெப்டன் பதவிக்கு ஆப்பு வைக்க முயற்சிக்கிறான் என்று ராஜு சொல்ல இப்படி பிரச்சினை கூடிக்கூடி சரவணா ராஜு டீம்ல இருந்து வெளியில வாறான். 


சரவணா போனது ராஜுட டீமுக்கு பெரிய ஆப்பாக போயிருச்சு. அது ஏனென்டா இன்னும் கொஞ்ச நாள்ல ராஜுட டீமுக்கும் அதே ஊர்ல இருக்கிற ரமணா டீமுக்கும் ஒரு பெரிய மெட்ச் இருக்கு. இந்த மெட்ச்ல தோக்குற டீமுக்கு இன்னும் 6 வருஷத்துக்கு அந்த ஊர்ல கிரிக்கட்டே விளையாடே ஏலாது. இது அந்த முக்கியமான மெட்ச்ல இருக்கிற கன்டிசன். ராஜுட டீம்ல இருந்து சரவணா வெளியில வந்த கதை கேள்விப்பட்டதுமே ரமணா டீம் சரவாணாவ தன்ட டீமுக்கு எடுக்கிற முயற்சில இறங்கி இறுதியில சரவணாவ டீமுக்கு எடுத்துட்டாங்க.(நல்ல விலைக்கு விலை போனானோ தெரியல) 

இப்ப மெட்ச்க்கு ரெடியாகிற காலம். ரெண்டு டீமும் பயங்கர பயிற்சி காலம். அது மட்டுமில்ல சரவணா ராஜு டீம்ல இருந்து வெளியில வந்தத பற்றி ஊரே கதக்கிற காலம். ராஜுதான் பக்கத்து ஊரோட நடந்த மெட்ச்ல வெல்றதுக்கு காரணம் என்று ஒரு கூட்டம். சரவணாதான் காரணம் என்று இன்னொரு கூட்டம். அதுமட்டுமா ராஜு அவன சுத்தி இருக்கிறவனுங்க நம்ம ஊர்ல வம்பலந்து திரியிற பயலுங்கள கூப்பிட்டு சரவணாவ பற்றி தப்பு தப்பா பேசுறதும் அதேபோல சரவணா அந்த பயலுங்கள (மீடியா பயலுங்களோ தெரியல) கூப்பிட்டு ராஜுவ பற்றி தப்பு தப்பா பேசுறதும் இந்த காலத்துலதான் நடக்குது. அதுமட்டுமா சரவணா டீம்ல இருக்கிறவனுங்க சரவணாவ நம்ம டீம்ல சேர்த்தது தப்பு என்று சொல்லிக்கிட்டு ராஜு பக்கத்துக்கும் ராஜு கெப்டன் பதவிக்கு சரியில்ல என்று சொல்லிக்கிட்டு சரவணா பக்கத்துக்கும் கிரிக்கட் வீரர்கள் தாவுரதும் இந்த காலத்துலதான்.

மொத்தத்துல இப்ப இது ரெண்டு டீமுக்கு மெட்ச் என்று சொல்றத விட ராஜுக்கும் சரவணாவுக்கும் இடையில நடக்குற மெட்ச் என்றுதான் சொல்லனும். ராஜுட டீமுக்கு பயிற்சி கொடுக்க பக்கத்து இந்தூர்ல இருந்து ஆள் வரப்போறாங்களாம். அப்படியென்னா இந்த மெட்ச் எப்படியிருக்கும். 


இந்த மெட்ச் நடக்குறதுக்கு முன்னால இன்னும் ஆயிரம் விஷயம் நடக்கலாம். நானும் கொஞ்சம் பார்த்துகிட்டுதான் இருக்கன். இன்னும் எழுதுறன். வேய்ட் பண்ணுங்க.

4 comments:

Sajee said...

the way u r writing is good but the content is not clear. anyway good try. keep it up.

தேசியன் said...

கிணற்றுத் தவளைகளுக்கு இது எல்லாம் எங்க விளங்க போகுது..

Sajee said...

சொல்லுறவங்க ஆற்று தவளையாக்கும்....

ஷாகிர் said...

கிணற்றை விட ஆறு பரவாயில்லை... எப்படியோ நீர் தவளை என்பது மட்டும் புரியுது