நான் முன்ன வேலை செஞ்ச ஆபிஸ்ல ஒரு பெடியன் இருக்கான். பெயர் வதீஸ். இவனால ஒரே தொல்ல.. எப்ப பார்த்தாலும் பதிவு ஆரம்பி பதிவு ஆரம்பி என்று சொல்லிகிட்டே இருப்பான். நான் பதிவு ஆரம்பிச்சு எதத்தான் எழுதி கிழிக்கிறது. இத வாசிச்சு முடிக்கையில அது புரியும் என்று நினைக்கிறன். சஞ்சிகைகளில எழுதுற கட்டுரைய எத்தன பேர் வாசிக்கிறானுங்க என்றே தெரியாது. (அவன் சொல்றதுக்கு ஒரு வருஷத்துக்கு முன்னாலயே இந்த பதிவ ஆரம்பிச்சாச்சு) ஆனா ஒன்னும் பதிய இல்ல.
அது அப்படியிருக்க 12ம் திகதி எனக்கு கோல் பண்ணி நாளைக்கு ஏதோ பதிவர் கூட்டம் இருக்காம். வா என்று சொன்னான். அடப்பாவி மவனே நான் பதிந்ததே இல்லயே என்று சொன்னேன். கேட்டானா.. புதிய ஆட்களும் வரலாம் வா என்றான். சரி போய்த்தான் பார்ப்பமே என்று
வதிஸ், நிரஞ்சன் என்கிற இரண்டு நண்பர்களுடன் அங்க போனன். அங்க போய் பார்த்தா தெரிஞ்ச மூஞ்சு ஒண்ண கூட காணம். எப்படியோ நிகழ்ச்சி இலங்கை வழமைப்படி 15 நிமிடம் தள்ளி 2.15க்கு ஆரம்பிச்சுது. ஒரு அக்கா (அக்காவோ தெரியல) எழும்பி ஏதோ வாசிக்க ஆரம்பிச்சாங்க. அப்பதான் இது இரண்டாவது பதிவர் சந்திப்பு என்று தெரிய வந்திச்சு. இப்படி ஏதோ ஏதோ சொல்லி தலைய குழப்பிட்டு போனாங்க.
அப்புறம் அறிமுகம் என்றாங்க. தன்ட பெயர் - பதிவிடும் பெயர் - பதிவின் பெயர் இதெல்லாம் சொல்லனுமாம். அடப்பாவி இதெல்லாம் தெரிஞ்சிருந்தா நான் வந்திருக்கவே மாட்டனே. நான் எதச்சொல்றது.. எழும்பி என் பெயரையும் ஒரு வருஷத்துக்கு முன்னால ஆரம்பிச்ச இந்த பதிவுட பெயரையும் சொல்லிட்டு இருந்துட்டன். அப்புறமா ஒவ்வொருத்தனா அறிமுகம் சொன்னாங்க. ஒருத்தன் எழும்பினான். நான் புல்லட் - எதுலயோ வெடிச்சிகிட்டு இருக்கன். நான் வந்தி எதுலயோ வலம் வந்திகிட்டு இருக்கன் என்று சொன்னானுங்க. ஒரு மண்ணும் புரியல. (இதுக்கெல்லம் அர்த்தம் அப்புறம் புரிஞ்சுது) சரி இருந்துதான் பார்ப்பமே என்ற பார்த்துட்டு இருந்தன்
அப்புறமா கலந்துரையாடல். பிரயோசனமாக பதிதல், பதிவில் பெண்கள் பங்களிப்பு, பின்னூட்டல் இப்படி நிறைய கலந்துரையாடினாங்க. பாதி விளங்கவே இல்ல பாதிதான் விளங்கிச்சு. பதிவில் பெண்கள் பங்களிப்பு என்று சொல்லிகிட்டு ஒரு அக்கா முன்னால வந்து பேசினா பாரு. ஐயோ கலக்கிட்டாங்க. எப்ப முடியும் எப்ப முடியும் என்று பார்த்துகிட்டே இருந்தன். எங்க மேலும் - மேலும் என்று நீட்டிகிட்டே போனாங்க. முடியல. அதவிட எனக்கு தெரியாத தமிழ் எல்லாம் பேசுறாங்க. இந்த சொற்கலெல்லாம் நான் கேட்டதே இல்ல. பதிவு என்றே சொல்லே அப்பதான் தெரியும். ழ-ள-ல எழுத்துகளே எனக்கு சரியா உச்சரிக்க வராது. (நல்ல காலம் நான் பேசல்ல. பேசி இருந்தன் அப்புறம் பதிஞ்ச மாதிரித்தான்) இன்னொன்டு சொல்லனும். இடை இடையே நான் முதல்ல சொன்ன அந்த வெடிச்சிட்டு இருக்கிற புல்லட் எழும்பி ஏதேதோ சொல்வான். கொஞ்சம் தமாஸாதான் இருந்தது. நிறைய பேர் சிரிச்சாங்க. ஆனா கிட்ட இருந்த எனக்கே அவன் பேசினதுல நிறைய விளங்க இல்ல. நான் நினைக்கிறன் எனக்கு அவன்ட மொழிநடை விளங்க இல்ல என்று.. சரி சரி அத விடுவம்.
இப்படி போய்கிட்டு இருக்கும் போது சிற்றூண்டி தந்தாங்க. (அதுக்கு அப்புறம் அதுக்கு காசு வாங்கிட்டாங்க. அது வேற விஷயம்) சிற்றூண்டி நல்லா இருந்தது. சிற்றூண்டி முடிச்சிட்டு கை துடைச்ச டிசுவ வீசலாம் என்று டஸ்பின் தேடினன். கிடைக்கல்ல. நேரா சமயலறைக்கு போனன். ஒரு அக்கா இருந்தாங்க. டஸ்பின் எங்க என்று கேட்டன். அது இங்க இல்ல என்றாங்க. சரி. புதிவர்கள் இதுலயும் இன்போமல் போல அப்படியென்று நினைச்சிகிட்டு பக்கத்துல இருந்த ஒரு பேக்ல போட்டுட்டு வந்துட்டன்
பிறகு பேப்பர் வெட்டும் கேம், வட்டம்போடும் கேம் அப்படியென்று இரண்டு வைச்சாங்க. நாங்க தோத்துட்டம். அந்த அனுபவமும் நல்லாத்தான் இருந்தது. இப்படி கலந்துரையாடல் - சிற்றூண்டி – விளையாட்டு என்று நிகழ்ச்சியும் முடிஞ்சுது. அப்புறம் எனக்கு தெரிஞ்சவர்களிடமும் தெரியாத சிலரிடமும் சொல்லிட்டு புறப்பட்டன்.
என்னதான் சொன்னாலும் இந்த பதிவர் சந்திப்புலதான் பதிவர்கள் என்ன செய்றாங்க என்ற விளங்கிச்சு. அப்படியே நான் இன்டைக்கு பதிய ஆரம்பிச்சுட்டன். எழுதியதில் எதுவும் இருக்காது என்பது தெரியும். எனினும் ஒரு சிறு முயற்சியை எடுத்தேன். தொடர்ந்தும் எழுத முயற்சிக்கிறேன். நீங்களும் எனக்கு உதவி செய்ய வேண்டும். என்ன அப்படி பார்க்கிறீங்க. உதவி செய்யத்தான் வேணும்.
ஓகே.. அப்ப வரட்டா…
4 comments:
யாரு இவரு...? எங்கிருந்து வந்தாரு..?
பதிவர் சந்திப்போட ஆரம்பிச்சிருக்கு பயபுள்ள
அனானியாரே இவரு வானத்தில இருந்து குதிச்சவராம்
இவரு எத சாதிக்க போறாரு என்று பார்ப்பம்..
funnya irukku shakir. keep it up
Post a Comment